பரலோகத் தந்தைக்கு பலியை அளிப்போம் குருவுடன் சேர்ந்து நம்மையே அளிப்போம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரலோகத் தந்தைக்கு பலியை அளிப்போம்

குருவுடன் சேர்ந்து நம்மையே அளிப்போம்


1. உடல் உயிர் அனைத்தையும் உமக்களிக்கின்றோம்

உரிமைகள் யாவையும் உடனளிக்கின்றோம்

உலகினில் வாழும் உயிர் பொருள் யாவும்

உம் திருமகனோடு சேர்ந்தளிக்கின்றோம்


2. கிறிஸ்துவில் நாமும் என்றென்றும் வாழ்வோம்

கிறிஸ்துவில் நாமும் என்றென்றும் மகிழ்வோம்

கிறிஸ்துவில் வாழ்வை நாமும் பின்தொடர்ந்து

கிறிஸ்தவனாய் இவ்வுலகினில் வாழ்வோம்


3. கிறிஸ்துவின் இறப்பை ஞாபகப்படுத்த

நாங்கள் இப்பலியை கொண்டு வருகின்றோம்

கிறிஸ்துவின் உயிர்ப்பை ஞாபகப்படுத்த

நாங்கள் இப்பலியை கொண்டு வருகின்றோம்