தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும் தலைபணி ஜெயராணி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்

தலைபணி ஜெயராணி


1. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை

விமரிசை புரிராணி


2. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்

குதூகலி மகாராணி


3. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

ஆந்திரம் குடகும் அகில மராட்டம்

ஆண்டிடு மகாராணி


4. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

தாரணி பாரத பாண்டியர் சேரர்

சோழர் புகழ்ராணி