அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அம்மா என்றேன் என் தெய்வமே

அபயம் நீயல்லவா - உயர்

அன்பால் கொண்ட நெஞ்சம் அதில்

நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா

படரும் கொடியாய் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே

வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே


1. சேயின் குரலைக் கேட்டிட ஒரு

தாய் வேண்டும் அல்லவா

கனிந்து இதயம் உருகினேன் அருளை அருள வா


2. சிறிய பறவை போல நான் உன் சிறகைத் தேடினேன்

சிவந்த மலரின் அரும்பு போல் உன் நிழலை நாடினேன்

ஒளியே வா நல்வழியே வா என் நெஞ்சில் நிறைந்து வா