♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
மீட்பரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
அல்லேலூயா ஆமென் ஆகா அல்லேலூயா ஆமென்
1. நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்
புகழ்ப்பாடலுடன் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்
ஏனெனில் ஆண்டவரே மாண்புமிகு இறைவன்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்
2. தாள்பணிந்து அவரைத் தொழுதிடுவோம்
முழந்தாளிடுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்
அவரே நம் கடவுள் நாமோ அவர் மக்கள்
ஆடுகள் நம்மைக் காத்திடும் இறைவனவர்