உயிரோடு கலந்து உறவான உனக்கு நன்றி உலகினில் உறவுகள் அளித்திட்ட நிலைக்கு நன்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிரோடு கலந்து உறவான உனக்கு நன்றி

உலகினில் உறவுகள் அளித்திட்ட நிலைக்கு நன்றி

மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு நன்றி

உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு நன்றி

நன்றியின் பாடல் உறவின் பாடல்

நன்மையைக் கூறல் வாழ்வின் தேடல்


1. கவிபாடும் உலகை படைத்திட்ட இறைக்கு நன்றி

கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு நன்றி

கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு நன்றி

காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு நன்றி


2. வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு நன்றி

வளங்களும் நலன்களும் நீ தானே எமக்கு நன்றி

அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு நன்றி

அன்பினில் அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு நன்றி