எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும் இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்

இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும்


1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்

சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்

மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்

மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்

நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்

நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்

எல்லாம் உன் புகழ்பாடுதே உன்

சொல்லாலே உயிர் வாழுதே


2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்

தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்

கோவிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்

பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்

நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்

நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்