என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க எதிரிகளும் எனை வெல்வாரோ எந்த தீமைகளும் எனை வீழ்த்திடுமோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆயன் இயேசிருக்க

அவர் பாதம் நான் இருக்க

எதிரிகளும் எனை வெல்வாரோ

எந்த தீமைகளும் எனை வீழ்த்திடுமோ


1. வழி தவறி நான் அலைந்தேன்

வாழும் வழி நான் தொலைந்தேன்

அன்பு தெய்வம் தேடி வந்தாரே - என்னை

அரவணைத்து அள்ளிச் சென்றாரே

பசும் புல்வெளியில் நடந்திடச் செய்தார்

பாசம் நேசம் பரிவும் தந்தார்

மட்டும் மறந்திடச் சொன்னார்


2. வானத்தையும் பூமியையும் அதில் வாழும்

உயிர்களையும் மனிதனையும் படைத்தவர் அவரே

உயர் மாண்புகளைத் தந்ததும் அவரே

ஆண்டவர் எனக்கு அரணாய் உள்ளார்

ஆட்சிகள் அனைத்தும் எனக்குத் தந்தார்

திருடர்கள் எவரும் இந்த ஆட்டினைத் தீண்டார்