பகிர்வினில் இணைந்திடுவோம் - இறை உறவினில் கலந்திடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பகிர்வினில் இணைந்திடுவோம் - இறை

உறவினில் கலந்திடுவோம்

இயேசுவின் உடலை உள்ளத்தில் ஏற்று

என்றுமே வாழ்ந்திடுவோம் - நாம்

இயேசுவின் நல்விருந்து நிறைவாழ்வினைத் தரும் விருந்து


1. உயிருள்ள உணவாய் நீ இருக்க

உவப்புடன் உம்மை உண்டிடுவோம்

உடல் பொருள் ஆவி அனைத்தையுமே

உலகுக்கு அளித்து வாழ வைப்போம்


2. அழிவில்லா உணவாய் நீ இருக்க

அகத்தினில் ஏற்று வாழ்ந்திடுவோம்

புவிதனில் புனிதனாய் நடந்திடவே

புதுயுகம் படைப்போம் இப்பூவுலகில்