என் ஆற்றலின் ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன் திருவடி அமர்ந்திடுவேன் கவலைகள் மறந்திடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆற்றலின் ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன்

திருவடி அமர்ந்திடுவேன் கவலைகள் மறந்திடுவேன்

என் ஆற்றலின் ஆண்டவரே


1. அரணும் கோட்டையும் அவர் தாமே

வலிமையும் துணையும் அவர் கரமே

வாழ்வும் வளமையும் வழங்கிடுவார்

இடறும் வேளையில் காத்திடுவார்

மாந்தர் அழியவே விடுவதில்லை

மானிடர் துயரினில் மகிழ்வதில்லை

தோளில் தினமும் எனைச் சுமந்திடுவார்

தாயைப் போல தினம் காத்திடுவார்


2. உமது பேரன்பை புகழ்ந்திடுவேன்

உமது நினைவினில் மகிழ்ந்திடுவேன்

அடைக்கலம் உம்மில் கண்டிடுவேன்

சிறகுகள் நிழலில் அகமகிழ்வேன்

கால்கள் சோர்ந்திட விடுவதில்லை

காத்திடும் கண்கள் அயர்வதில்லை

தேடி வந்து எனை மீட்டிடுவார்

தேவைகள் யாவையும் தீர்த்து வைப்பார்