வார்த்தையாக இருந்தவரே வடிவெடுத்து வந்தவரே காத்திருந்த சேயெனக்கு உம்முடலைத் தருவாயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வார்த்தையாக இருந்தவரே வடிவெடுத்து வந்தவரே

காத்திருந்த சேயெனக்கு உம்முடலைத் தருவாயா

தருவாயா தருவாயா

உண்மையே உயிரே உள்ளம் வர சம்மதமா

இறைவா சம்மதமா


1. வீதியிலே இருந்த என்னை

விருந்துக்கு அழைத்து வந்தாய்

ஊதாரி மைந்தன் என்னைப்

புத்தாடை அணிய வைத்தாய் ஆ

வெறுமையான பாத்திரம் நான்

அப்பங்களால் வழியச் செய்வாய்

ஒன்றுமில்லா கற்ஜாடி நான்

இரசமாய் நீ நீரம்பிடுவாய் ஆ


2. தூரத்திலே இருந்த என்னை

என்னருகே வா என்றாய்

பாவத்திலே வீழ்கையிலே

சாய்ந்து கொள்ளத் தோள்கொடுத்தாய் ஆ

பாழ்வெளியில் அலைந்த என்னை

பந்தியிலே அமரவைத்தாய்

பக்கத்திலே நீ இருந்து

பரிவன்பைத் தந்திடுவாய் ஆ