ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக

நீரே எங்களுக்குப் புகலிடம்


1. மலைகள் தோன்று முன்பே

பூமியும் உலகுமுண்டாகு முன்பே

ஊழி ஊழிக்காலமாக இறைவா நீர் இருக்கின்றீர்


2. வைகறை கனவினைப் போல்

வாடிட வளர்ந்திடும் பூண்டினைப் போல்

மூச்சு போல முடிந்து விட்டோம்

இறைவா எங்களைக் காத்திடுவீர்