உள்ளத்தின் உயிராய் எழுவாய் உயிருக்கு உணவாய் வருவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உள்ளத்தின் உயிராய் எழுவாய்

உயிருக்கு உணவாய் வருவாய்

குரு இவர் கரம் வழி அருள்வாய்

இறைவா வருவாய்


1. வானுறை இறைவன் பாவியர் எம்மை

சீருடன் பொறுத்த அன்பின் சின்னமாய்

இறைவா வருவாய்


2. உலகத்தின் ஒளியாய் பலருக்குத் துணையாய்

நிலவிட அருள்வாய் திருக்குலத்தவர் யாம்

இறைவா வருவாய்


3. அழிவிற்கு மரித்து அருளிலே உயிர்க்கும்

எழில்மிகு கிறிஸ்தவ வாழ்வில் வளர

இறைவா வருவாய்


4. பாசத்தின் பிணைப்பால் பாரிலுள்ளோர்க்கு

பரமனின் சபையின் சான்றாய் விளங்க

இறைவா வருவாய்