தாள் பணிந்தோம் தந்தாய் - இன்று தரும் பலிதனை நீ ஏற்பாய் அன்பாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாள் பணிந்தோம் தந்தாய் - இன்று

தரும் பலிதனை நீ ஏற்பாய் அன்பாய்


1. உலகிற் கிறந்து உம்மில் உயிர்க்க

உம் மகனுடனே எம்மையும் இணைக்க

உமக்கெனத் தந்தோம் உவந்தெமை ஏற்பாய்

உடைமை நீயாய் நிலைத்திருப்பாய்


2. புண்ணிய நதியில் பூத்த மலர்போல்

புனிதம் கமழ பிறர்க்கென வாழ

உந்தன் மகனுடன் எம்மையும் சேர்ந்து

உலகின் பலியாய் ஏற்றருள்வாய்