அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே

நிலைபெயராக் கன்னி மோட்ச நெறிகதவே வாழி


1. வானவன் கபிரியேலின் ஸ்துத்ய மங்கள மொழி ஏற்பாய்

ஞான சமாதான வழி நாம் நடந்திட தயை செய்வாய்


2. பாவ விலங்கறுப்பாய் குருடர் பார்த்திட ஒளி விடுப்பாய்

சாவுறுந் தீமையெல்லாம் நீக்கி சகல நன்மை அளிப்பாய்


3. தாயென உனைக் காட்டாய் உந்தன் தனயனாம் சேசுவுக்கு

சேயர் நாம் செய்யும் ஜெபங்கள் எல்லாம் சேர்த்து நீ ஒப்புவிப்பாய்


4. கன்னியர் தமில் உத்தம தாயே கடும்பவம் நின்றெம்மை ஆள்

உன்னத சாந்தமுள்ள மரியே உத்தம வரம் ஈவாய்


5. தூயவராய் நடக்கச் செய்வாய் சோர்விலா வழி சேர்ப்பாய்

சேயன் உன் சேசுவை நாம் நித்யம் சிநேகிக்க வரஞ் செய்வாய்


6. திவ்விய பிதாவுக்கும் அவரின் திருச்சுதன் சேசுவுக்கும்

இவ்விருவரின் நேச ஸ்பிரீத்துஸ் என்பவர்க்கே ஸ்தோத்ரம்