உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே

உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே

கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்

கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்

போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே

போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே


1. பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்

ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய்

தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்

ஆடென்னைத் தோள் சுமக்கத்

தேடித் தேடி அலைகின்றாய்

முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ

சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ

வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே - உன்னைத்

தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே


2. பாதத்தில் அமர்கின்றேன் பரிவன்பை உணர்கின்றேன்

நேசத்தில் என் கதையை மௌனத்தில் மொழிகின்றேன்

உறவெல்லாம் போலிகள் என்று

ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்

உலகெல்லாம் வேலிகள் என்று

உன்னிடம் வந்து யாசித்தேன்

கதை கேட்டு அருள்கின்றாய் விதை போட்ட வித்தகனே

கரம் நீட்டி அணைக்கின்றாய் உயிர் தந்த உத்தமனே

நீயின்றி நானில்லை என் இயேசுவே - உன்

நினைவின்றி வாழ்வில்லை என் இயேசுவே