அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம் அல்லல்கள் அகன்று விடும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம்

அல்லல்கள் அகன்று விடும் - அவள்

கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்

கவலைகள் மறைந்து விடும்


1. வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்

தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று

தேடா மானிடர் யாருளர் தரணியில்

பாடார் அவள் ஏற்றம்


2. பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்

பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று

செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை

எடுத்தே அரவணைக்கும்