என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா

என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா

என்னை நீ ஆள வா


1. அகத்தின் இருளை அகற்றும் அருளைப்

பொழிவாய் நின் வரவால்

நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும்

நல் உள்ளம் அருள வா

என் தெய்வமே மகிமை மன்னவா


2. வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே

மாந்தரைக் காத்திட வா

உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும்

என் உள்ளம் எழுந்து வா