உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய் உவப்புடனே உமதருளை நாளும் தாராய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய்

உவப்புடனே உமதருளை நாளும் தாராய்


1. சுமை சுமந்து சோர்ந்திருப்போர் வாரீர் என்றீரே

சுமை இனிது நுகம் எளிது என்றும் சொன்னீரே

கவலையினால் வாடுகையில் எங்கே செல்வோம் யாம்

இளைப்பாற்றி கொடுப்பவரும் நீரே அன்றோ


2. உலகினுக்கு ஒளியாக வந்தாய் நீயே

வாழ்வினுக்கு வழி நானே என்றாய் நீயே

உள்ளத்தினது இருளினிலே வாடும் நாங்கள்

உமதருளில் நிலைத்திருக்கும் மாண்பைத் தாராய்