நீயே எந்தன் சொந்தமாய் நீயே எந்தன் பந்தமாய் நிலைத்திடுவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயே எந்தன் சொந்தமாய்

நீயே எந்தன் பந்தமாய் நிலைத்திடுவாய்

என்னை நிறைத்திடுவாய்

இறைவா அருள்வாய் அருளைக் கேட்கிறேன்


1. மனம் சோர்ந்து நான் வாழும் நேரங்களில்

தலைசாய்த்து நான் தூங்க இடம் தாருமே

மனம் நொந்து நான் வாழும் வேளைகளில்

தலைவா உன் கரம் பற்ற இடம் தாருமே

நான் செல்லும் வழியெல்லாம் துணையாகினாய்

என் தேவா நீ என்னில் உணவாக வா

உனையே நினைத்து உனையே பாடி

இறைவா உன்னில் சரணடைந்தேன்


2. குணம் வேண்டி நான் வாடும் நேரங்களில்

நோய் தீர்க்கும் மருந்தாக நீ தேடி வா

கண நேரம் பிரியாமல் எனைக் காக்க வா

உன் பாத மலர் தேடி நான் கேட்கிறேன்

என் வாழ்வின் பொருள் எல்லாம் நீயாக வா

என் வாழ்வின் சுடராக நீ ஓடி வா

உனையே நினைத்து உனையே நாடி (பாடி)

இறைவா உன்னில் சரணடைந்தேன்