ஒருநாளும் விலகாத என் தெய்வம் இயேசு என் பக்கம் இருக்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒருநாளும் விலகாத என் தெய்வம் இயேசு

என் பக்கம் இருக்கின்றார்

அவர் என்னோடு இருக்க எந்நாளும் காக்க

அஞ்சாமல் நடந்திடுவேன்


1. என் ஆற்றல் அவரே என் மீட்பும் அவரே

பலன் தந்து என்னை எந்நாளும் காப்பவரே

என் கோட்டை அவரே என் அரணும் அவரே

என் முன்னும் பின்னும் எனைச் சூழ்ந்து வருபவரே

என்னை உள்ளங்கையில் பொறித்து

காலமெல்லாம் காக்க என் தேவன் இருக்கின்றார்


2. என் தேவன் அவரே என் ஆயன் அவரே

தன் சிறகில் என்னை எந்நாளும் சுமப்பவரே

என் ஒளியும் அவரே என் வழியும் அவரே

நான் எங்கு சென்றாலும் என்னோடு வருபவரே

என் கரம் பிடித்து என்னை

பசும்புல்லில் நடத்த என் நேசர் இருக்கின்றார்