அப்பம் தந்தோம் அன்பைத் தந்தோம் போதாதென்று இன்று எம்மைத் தந்தோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பம் தந்தோம் அன்பைத் தந்தோம்

போதாதென்று இன்று எம்மைத் தந்தோம்

தேவன் மகன் காணிக்கையாய்

எம்மைத் தந்தோம் அவர் தன்னைத் தந்தார்


1. காலமெல்லாம் ஈட்டியதை காணிக்கை யாம் தந்தோம்

பொன்னுலகம் கேட்கவில்லை

மண்ணுலகம் கேட்கவில்லை

நீ நெஞ்சில் அமர்ந்தால் துன்பமில்லை


2. இறைமகனின் புன்சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்

தீபங்களின் வெளிச்சத்திலே

கீர்த்தி தந்தார் புவனத்திலே

வாழ்வின் ஒளியாய் வந்தார் இங்கே


3. தேவமகன் கண்களிலே ஆயிரம் பௌர்ணமிகள்

காணிக்கை தான் செலுத்த வந்தோம்

கண்ணிரண்டும் கசிந்து நின்றோம்

காணிக்கை தர எம்மை சுத்தம் செய்தோம்