ஒருநாளும் அழியாத உறவென்னிலே உருவாகும் அருளேசு வரவென்னிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒருநாளும் அழியாத உறவென்னிலே

உருவாகும் அருளேசு வரவென்னிலே

பிரிவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்

எனையாளும் அவனன்பு இனி நாளுமே


1. நட்பென்னும் வானங்கள் இருள்மூடும் போதிலே

உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே

உன் அருளன்பு எனைத் தாங்குமே

அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரங்கள்

ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து

ஒருநாளும் அழியாத உறவொன்று தா


2. இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே

இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே

இனி எந்நாளும் பயமில்லையே

முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே

ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்

உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா


3. நம்பிக்கை நீயல்லவோ நலமாக்க வா இறைவா

நெஞ்சுக்குள் நோயல்லவோ குணமாக்க வா இறைவா

இனி நானுந்தன் சேயல்லவோ

கையேந்திக் கேட்கின்றேன் கருணைக்கண் நோக்குமே

காலங்கள் தோறும் உன் பாதங்கள் வேண்டும்

என் சோகங்கள் அங்கே கண் மூடித் துயிலும்