ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன் என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்


ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

மாசற்ற வழியில் நான் நடக்க

என்னுள்ளம் வாருமே


1. வாழ்நாட்கள் புகையெனவே மறைகின்றதே

என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே

என் உணவையும் நான் உண்ண மறந்தேன்

என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக

என்னோடு நீயும் கலப்பாய் இனி


2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்

பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கின்றேன்

நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே

என்னிதய துடிப்பாக என் வழியில் ஒளியுமாக

என்னோடு நீயும் கலப்பாய் இனி