ஆண்டவருக்கு ஆனந்தமாய் புகழ் பாடுங்கள் ஆர்ப்பரித்து அக்களித்து அவரைப் போற்றுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவருக்கு ஆனந்தமாய் புகழ் பாடுங்கள்

ஆர்ப்பரித்து அக்களித்து அவரைப் போற்றுங்கள்

வீணை கொண்டு யாழிசைத்து கீதம் பாடுங்கள்

நாதமிகு தாளத்துடன் அவரை வாழ்த்துங்கள்


1. விண்ணுலகும் மண்ணுலகும் களி கூறட்டும்

கடலலையும் வயல்வெளியும் வாழ்த்திப் பாடட்டும்

நிலவுலகை நீதியுடன் ஆட்சி செய்பவர்

பூவுலகில் உண்மையுடன் தீர்ப்பளிப்பாரே - இந்த


2. உலகெங்கும் வாழ்வோரே இறையைப் பாடுங்கள்

தூயதொரு உள்ளத்துடன் அவரைப் போற்றுங்கள்

மக்களினக் குடும்பங்களே வாழ்த்திப் பாடுங்கள்

மாட்சிமையின் செயல்களையே எடுத்துச் சொல்லுங்கள்-இறை