இதயத்திலே கோயில் செய்தேன் எழுந்து வாரும் தேவா என் ஆயுட்காலம் முழுவதுமே உன்னுடன் வாழ்வது மேலானது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயத்திலே கோயில் செய்தேன் எழுந்து வாரும் தேவா

என் ஆயுட்காலம் முழுவதுமே உன்னுடன் வாழ்வது மேலானது


1. உன் புகழை எடுத்துரைக்க ஏழிசை ராகங்கள் இசைத்தேன் -2

உன் நாமம் சொல்லாத பொழுதெல்லாம்

வீணான நாள்தானே என் தலைவா (2)

என் வாழ்வும் நீ தந்த கொடையல்லவா

தெய்வீக இசையால் உன் பெயர் சாற்றுவேன்

வானமே இடிந்து விழுந்தாலும்

வார்த்தையில் மாறாத திருமகனே

கங்கை நதி திசை மாறலாம் உன்

கருணையும் அன்பும் மாறாதையா


2. உயிருள்ள வரையில் உம் அருளை

உலகினர் நடுவினில் உரைத்தேன் (2)

பொன்னான திருநாமக் கீதத்தினை

சங்காக ஊரெங்கும் முழங்கிடுவேன் (2)

என் தேவன் உமது பெருமைதனை

எக்காளத் தொனியினில் எடுத்துரைப்பேன் - வானமே ... ...