ஆண்டவர் சந்நிதி கூடிடுவோம் இன்று ஆனந்தம் மனதினிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் சந்நிதி கூடிடுவோம்

இன்று ஆனந்தம் மனதினிலே

அர்ப்பணப் பூக்களின் நறுமணமே

இனி ஆண்டவன் வழிதனிலே


1. நித்தமும் பலியாகும் நித்தியன் இயேசுவின்

உத்தம மாந்தர்களாய் நாம் இறைபணி ஏற்றிடுவோம்

இந்த பலியினில் கலந்து பரிசுத்தம் அடைந்திட

இறைகுலமே வாரீர் நீவிர் ஒரு குலமாய் வாரீர்


2. சத்திய வேதமும் சமத்துவ கீதமும்

இத்தரை மீதொலிக்க நமை இறைவன் அழைக்கின்றார்

அன்புப் பணியினை நாமும் பகிர்ந்திட பலன்பெற

இறைகுலமே வாரீர் நீவிர் ஒரு குலமாய் வாரீர்