பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார். அருளப்பர் 20: 22-23
" நாங்கள் அருட்தந்தையர்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய மாட்டோம். நேரிடையாக ஆண்டவரிடமே பாவ அறிக்கை செய்துகொள்வோம் என்பாராகில் அவர்களுக்கு நரகம் உறுதி. பாவசங்கீர்த்தனம் என்பது ஆண்டவராகிய இயேசு சுவாமி ஏற்படுத்திய திருவருட்சாதனம். குருக்களுக்கு ஆண்டவர் கொடுத்த அதிகாரம்.
இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய ஒழுங்கை, சுவாமியின் கட்டளையை நாம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். அதனால் பாவசங்கீர்த்தனம் செய்துதான் ஆக வேண்டும் அட்லீஸ்ட் மாதத்திற்கு ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும். நான் குருக்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய மாட்டேன் என்று வாழ்ந்து மரித்து ஆண்டவர் முன் நிற்கும்போது " நீ இவ்வளவு பாவம் செய்துள்ளாயே ! நித்தய நரகத்திற்கு செல் " என்பார்.
ஆண்டவரே ! நான் உம்மிடம் டைரக்டா (நேரிடையாக) பாவசங்கீர்த்தனம் செய்தேனே என்று சொன்னால் அவர் சொல்வார். நான்தான் அந்த அதிகாரத்தை குருக்களுக்கு கொடுத்து இரு ந்தேனே! எத்தனை குருக்கள், உனக்கு எத்தனை முறை வாய்ப்பு கொடுத்தேன். என் வார்த்தையை பழித்தாயே ! மதிக்கவில்லையே ! அதற்க்கு காரணம் உன்னுடைய அகங்காரம். அது பிசாசுனுடையது. அதனால் அவன் இருக்கும் இடத்திற்கே போ" என்று அனுப்பி விடுவார்.
"நான் சென்று அருட்தந்தையரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய மாட்டேன் " என்று ஒருவன் சொன்னால் அது அகங்காரத்தின் வெளிப்பாடு. நீங்கள் எந்த குருவிடம் வேண்டுமானாலும் பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள். ஊர்விட்டு ஊர் சென்று கூட பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள்.வயதான குருவாக இருந்தாலும் அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள்.
பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அங்கு பரிசுத்த ஆவியான ஆண்டவர் செயலாற்றுகிறார். அங்கு இருப்பது குருவல்ல ஆண்டவர் இயேசு. நாம் இயேசுவிடம் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் அவரிடம் நம் எல்லா பாவங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல வேண்டும். பெரிய பெரிய பாவங்கள் எல்லாம் ஞாபகம் வந்தும் இந்த பாவத்தை மறந்துபோன பாவ லிஸ்ட்டில்சேர்த்தோம் என்றால் அந்த பாவம் மன்னிக்கப்படாது.
உண்மையான குற்ற உணர்வோடு, மனஸ்தாப உணர்வோடு நாம் நம் கடமையை செய்து விடுவோம். மற்ற சிந்தனைகளோ! எதுவோ வேண்டாம்.
பாவசங்கீர்த்தனம் என்ற அரிய கொடை. கடவுளின் இரக்கத்தின் கொடையை இன்றைய கத்தொலிக்கர்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை என்பதே இன்றைய நிலை. எல்லா வளமும் நம் தாய்த்திருச்சபையில் இருந்தாலும் அங்கு ஓடுவதும், இங்கு ஓடுவதும் என்ற நிலையற்றதன்மையில்தான் வாழ்கிறார்கள். நம் கத்தொலிக்க திருச்சபை போதிப்பதை மட்டும் நம்பாமல். யார் யார் என்ன என்ன சொல்கிறார்களோ அத்தனையும் நம்புவதுதான் இன்றைய பலவீனமான அதிக கத்தொலிக்கர்களின் நிலமை.
எப்பேர்பட்ட போதகனாக இருந்தாலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் மரித்தால் அவர்களுக்கும் அதே நிலமைதான்.
குறிப்பு : மேலே உள்ள பதிவு கத்தோலிக்கர்களுக்கான பதிவு.. .
இந்த பதிவு சிலருக்கு கடினமாக தோன்றலாம்... கசப்பு இனிக்ககாது...நெருப்பு சுடாமலிருக்காது.. உண்மை எல்லோருக்கும் எப்போதும் இனிமையாக இருக்காது....
இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !