சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்

சங்கமம் பங்கின் சங்கமம் சங்கமம் பகிர்வின் சங்கமம்

ஆனந்தம் புது ஆனந்தம் தரும் ஆலயம் எங்கள் ஆலயம் (2)


1. விழிகள் திறந்தால் பார்வை தெரியும்

பாதை தெளிந்தால் பயணம் இனிக்குமே

மனங்கள் திறந்தால் உறவு மலரும்

பகைமை உதிர்ந்தால் பகிர்வு மணக்குமே (2)

அன்பினில் இணைந்து அருளினில் நனைந்து

பங்கினில் நிலைத்து பகிர்வில் மகிழுவோம் (2)


2. ஏக்கங்கள் ஒன்றானால் எழுச்சி ஓங்கும்

தேக்கங்கள் களைந்தால் மாற்றம் பிறக்குமே

எண்ணங்கள் நன்றானால் நம்பிக்கை பெருகும்

அன்புடன் ஒன்றித்தால் எதிலும் வெற்றியே (2)

ஆர்வமாய் இணைந்து ஆக்கமாய் உழைத்து

ஆதிசபை உணர்வில் வாழ்வை வாழுவோம் (2)