எல்லாருக்கும் தெறிந்த புதுமைதான். ஒரு முறை அந்தோனியார் ஒரு இடத்திற்கு மறையுரை ஆற்ற சென்றிருந்தார். அந்த போதனையை கேட்க அவ்வூர் மக்கள் யாரும் வரவில்லை. உடனே கடற்கரைக்கு சென்று மீன்களுக்கு போதிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே கடலில் இருந்த அத்தனை மீன்களும் சிரியது முதல் பெரியது வரை கரையோரமாக வந்து அவரது போதனையைக் கேட்டது. அந்தோனியார் பாஷை மீன்களுக்கு புரிந்ததால் அவைகள் ஆர்வத்துடன் கேட்டன. இதைக்கண்டு அதிசயித்த அவ்வூர் மக்கள் அவரிடம் மன்னிப்புகேட்டு பின் அவர் போதனைக்கேட்டார்கள்.இதுதான் அந்நியபாஷை.
சும்மா புலம்புவது கத்துவது புரியாத எதையோ வாயில் வருவதை எல்லாம் பேசுவது அல்ல.
கடவுள் விசயத்தில் எல்லாம் சரியாக இருக்கும்.. உளறுவதை ஒருபோதும் ஜெபமாக கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது.
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !