என் தெய்வமே என் ஜீவ ஒளியே நீர் எந்தன் வழியாக வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தெய்வமே என் ஜீவ ஒளியே

நீர் எந்தன் வழியாக வா

நானுந்தன் வழிதன்னில் வழுவாமல் வழிசெல்ல

வருந்தும் என் வளமாக வா ஆ -2 (2)


1. தேவா உன் தேகம் நான் உண்ண வந்தேன்

தீராத வினை தீரவே எந்தன் தேவா நீ எனில் வாருமே (2)

பாவங்கள் கோடி பறந்தோடி போகும் -2

பார்போற்றும் தேவன் என் உளம் தேடி வரவே -2


2. குளிர்கால நேரம் குயில் பாடும் கானம்

குழலோடு உனைத் தேடினேன்

எந்தன் குறை தீர்க்க எனில் வாருமே (2)

என் நோய்கள் இன்று எனை அகன்று போகும் -2

என் தேவன் இன்று என் உளம் தேடி வரவே -2