குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலை மோதுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குறையாத அன்பு கடல் போல வந்து

நிறைவாக என்னில் அலை மோதுதே - அந்த

அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

பலகோடி கீதம் உருவாகுதே


1. கண்மூடி இரவில் நான் தூங்கும்போது

கண்ணான இயேசு என்னைக் காக்கின்றார் (2) - உன்னை

எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

மண்மீது வாழ வழிசெய்கிறார் ஆ... (நான்) -2


2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (2) - மண்ணில்

துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...(கண்ணீர்) - 2