இறைகுலமே எழுக இறைபதமே வருக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைகுலமே எழுக இறைபதமே வருக - 2

புனித நன்னாளில் புகழ்ந்திடவே

புதுவாழ்வில் தினம் திளைத்திடவே

வேற்றுமை நீக்கி வெறுமையைப் போக்கி

இறைவன் இயேசுவில் வாழ்ந்திடவே


1. பாதங்கள் கழுவிய பரமனின் தூய

பணிதனைத் தொடர்ந்திடவே (2)

பாரினில் எங்கும் அவரது திருமுகம் படைப்பினில் உணர்ந்திடவே

பகிர்ந்திட வருவோம் நம்மையே தருவோம் -2

இகமதில் என்றும் சாட்சியாய் வாழ்வோம்


2. சிலுவையின் தியாகப் பலியினில் கலந்து

சிறுமைகள் போக்கிடவே (2)

சிந்திய இயேசுவின் குருதியினாலே அகவொளியாகிடவே

அன்புறவாகும் அகிலத்தைக் காண - 2

அனைவரும் வருவோம் அவரிலே இணைவோம்