இறைமகன் இயேசு அழைக்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைமகன் இயேசு அழைக்கின்றார்

இகத்தினில் நமக்கு வாழ்வளிக்க (2)

இறைமகன் இயேசு அழைக்கின்றார்

அல்லேலூயா அல்லேலூயா - 4


1. உயிரும் உணவும் நானே என்றார்

எனை உண்டால் வாழ்ந்திடுவீர் (2)

உலகின் ஒளியும் நானே என்றார்

உண்மையின் வழியும் நானே என்றார்

உலகினில் நமக்குப் புகலிடம் இவரே - 2


2. உன்னத இயேசுவின் பாதம் பணிவோம்

உன்னை அன்பு செய்வது போல

அயலானை நேசி என்றார் (2)

உலகினில் எளியோர்க்கு செய்ததெல்லாம்

எனக்கே செய்தீர் என்றுரைத்தார் - உலகினில் நமக்கு ...