சம்மதமே இறைவா சம்மதமே தலைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சம்மதமே இறைவா சம்மதமே தலைவா - உன்

மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும்

வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே (2)


1. தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே

உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் (2)

கருவாக எனைப் படைத்து உயர்

கண்மணியாய் எனை வளர்த்து (2)

கரமதிலே உருப் பதித்து கருத்துடனே என்னைக் காக்கின்றாய்


2. மலையாய் நான் கணித்த பெரும் காரியமும்

உயர் காவியமும் மறைந்தே போனது (2)

திருவாக உனை நினைத்து உயர்

உறவாகவே நெஞ்சில் பதித்து (2)

உன் பெயரைச் சாற்றிடவே

நலம் தரவே என்னை அணைக்கின்றாய்