என்னை நான் உனக்குத் தரவந்தேன் என் தெய்வமே ஏற்றுக்கொள்வாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னை நான் உனக்குத் தரவந்தேன்

என் தெய்வமே ஏற்றுக்கொள்வாய் (2)

உன்னை நீ எனக்குத் தரவந்தாய்

என் நெஞ்சிலே ஏற்றுக்கொண்டேன் (2)


1. இதயத்தில் இரக்க உணர்வுகள் எனக்குள்ளே தெரிகிறதே

உலகத்தில் மனித நேயத்தின் உணர்வுகள் மலர்கிறதே

அத்தனையும் உம்பணிக்காய் அளிக்கின்றேன்

ஏற்றிடுவாய் இறைவனே

வறுமையில்லா வாழ்வமைக்க புறப்படுவோம்

துணையாகும் தெய்வமே


2. மனதுக்குள் பாச உணர்வுகள் தேன்துளியாய் நனைகிறதே

உறவுக்குள் நேச உணர்வுகள் உடல்வழியாய் குவிகிறதே

அத்தனையும் உம் பணிக்காய் அளிக்கின்றேன்

ஏற்றிடுவாய் இறைவனே

நல்வழியில் உலகமைக்க அணிவகுப்போம்

துணையாகும் தெய்வமே