சின்ன சின்னப் பாலகனே என்ன தருவது உனக்கு என்ன தருவது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சின்ன சின்னப் பாலகனே என்ன தருவது

உனக்கு என்ன தருவது

சிங்கார பாலகனே என்ன தருவது காணிக்கை என்ன தருவது (2)


1. தீப தூப மலர்களெல்லாம் தூயவனே தரவந்தோம்

தாகம் தீர்க்கும் அப்ப ரசமும் காணிக்கையாய் கொண்டுவந்தோம்

வாடும் ஏழை எளிய எங்கள் வாழ்வு அனைத்தும் தரவந்தோம்

உலகனே பாலகனே ஏற்றுக்கொள்வாயோ


2. விண்ணும் மண்ணும் படைத்தவனே

விலைப்பொருட்களைத் தரவந்தோம்

கண்ணின் மணியைக் காப்பவனே

கனிவு பணிவு தரவந்தோம்

உவகைப் பொங்கி உன்னதனே

உள்ளதனைத்தும் தரவந்தோம்