கரங்கள் ஏந்தும் காணிக்கை கடவுள் அவரே என் நம்பிக்கை இதய வானில் ஒளிரும் தீபம் இறைவன் அருள் அன்பினால்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கரங்கள் ஏந்தும் காணிக்கை

கடவுள் அவரே என் நம்பிக்கை

இதய வானில் ஒளிரும் தீபம்

இறைவன் அருள் அன்பினால் ஆ


1. வந்த காலங்கள் தந்த பாடங்கள் கொண்ட கோலங்கள் அவரில்

தந்த யாவுமே சென்றுவா என நின்று போய்விடும் நிலையில்

அன்றும் இன்றும் என் தேவன் என்னில்

நின்று நிதமும் என் காவலாய்

என்றும் எந்தன் நெஞ்சம் தன்னில் வாழ்கின்றார் ஆ


2. எங்கு நோக்கினும் எங்கு பார்க்கினும்

அன்பின் வாக்கினில் உலகம்

இந்த வாழ்க்கையில் சொந்தம் யாரென சந்தம் பாடிடும் மனமே

வீடும் நாடும் தேடும் யாவும் மூடுபனிபோல் இளகிடும்

தேவன் அருளே என் ஜீவன் முழுதும் நின்றிடும் ஆ...