♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பகிர்ந்து வாழும் மனமே இறையன்பில் வாழும் தினமே-2
அன்புப் பகிர்வு நலம் தரும் ஆயிரமாயிரம் அருள் தரும் -2
1. இறையன்பு கனிந்து திருமகனை அளித்து
நிறை வாழ்வு தந்ததும் பகிர்வே
அவர் மீட்பு மலர நம்மைத் தேர்ந்து எடுத்து
திருக்கூட்டமாக்கியதும் பகிர்வே (2)
இறைவன் வழியில் செல்லுவோம் - நம்
அன்பைப் பகிர்ந்து வாழுவோம் (2)
2. தினந்தோறும் வந்து திருப்பலியில் கலந்து
திரு உணவைப் பெறுவதும் பகிர்வே
நல் உறவு தீபம் உலகெங்கும் எரிய
நம்மைப் பகிர்ந்து வாழ்வதும் சிறப்பே (2)
இறைவன் வழியில் செல்லுவோம் - நம்
அன்பைப் பகிர்ந்து வாழுவோம் (2)