உழைப்பைக் கொடுத்தோமே உழைப்பின் கனிகளைப் படைத்தோமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உழைப்பைக் கொடுத்தோமே

உழைப்பின் கனிகளைப் படைத்தோமே (2)

எங்கள் காணிக்கைகள் ஏற்று

மாற்றும் எம் திரு உணவாய் இறைவா


1. அப்பரச உருவில் உந்தன் பிரசன்னம்

இதுவே எனக்கு தெய்வ தரிசனம் (2)

தரிசனம் தந்து திருவடி சேர்ப்பாய் - 2

தரணியரெம்மை இறைவா காப்பாய்


2. இரசத்தினில் கலக்கும் நீரின் துளியைப் போல்

இயேசுவில் இணையும் நாமும் இயேசுவே (2)

உரசல்கள் மறந்து நல் உறவினில் வளர்வோம் - 2

புதிய வானமும் பூமியும் படைப்போம்