காணிக்கை தரவந்தோம் தந்தோம் - எங்கள் சிந்தை மகிழ்வுடன் தந்தை இறைவனுக்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தரவந்தோம் தந்தோம் - எங்கள்

சிந்தை மகிழ்வுடன் தந்தை இறைவனுக்கு

காணிக்கை தர வந்தோம் தந்தோம்


1. கோதுமை மணியும் திராட்சைக் கனியும்

காணிக்கைப் பொருளாய் தரவந்தோம் (2)

உம் திருமகனின் உடலும் உதிரமும் -2

எம் திருஉணவாய் பெற வந்தோம் -2

இறைவன் என்றும் போற்றி போற்றி


2. நிலமதன் விளைவும் மானிட உழைப்பும்

நன்றியின் பலியாய் தரவந்தோம் (2)

வளமையும் வாழ்வும் நலன்கள் யாவும் -2

நின் அருட்கொடையாய் பெற வந்தோம் -2

இறைவன் என்றும் போற்றி போற்றி