இறையவனே என் வழித்துணை நீயே இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க வாழ்க வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையவனே என் வழித்துணை நீயே

இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க வாழ்க வாழ்க (2)


1. திசை தெரியாத மரக்கலம் போல

திரிந்திடும் வாழ்வு உனதொளி காண (2)

கலங்கரைத் தீபம் எனக்கு நீயாவாய்

நலந்தரும் வானக உணவென வாராய்


2. இகவழியாகி அக ஒளியாவாய்

பகைமையை நீக்கிப் புது உறவாவாய் (2)

தகுதியில்லாத எளியேனைத் தேடி

எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்