♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே
கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழ்ந்திடவே
இகத்தில் என்றும் இனிதாய் வாழ
இறைவன் ஆசீர் நம்மில் மலர
ஒன்றாய் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம்
1. இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும் ஆ
நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் ஆ
உறவில் நாளும் நிலைத்திடவே
உண்மை தேவனை அறிந்திடவே
2. இறைவன் பாசத்தை சுவைத்திட வேண்டும் ஆ
தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் ஆ
கருணை உள்ளத்தில் நனைந்திடவே
என்றும் அவரில் சேர்ந்திடவே