♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே
ஒன்றுகூடியே வாருங்களே
உண்மை விடுதலையை நாம் சுவாசிக்கவே நம் இறைமகன்
பிறந்துள்ளார் வாருங்கள் பாடுங்கள்
விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை
மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2)
1. சின்ன பாலகனின் கொஞ்சும் சிரிப்பதையும் இதயம் மகிழ்ந்திடுதே
துன்ப துயரங்களும் தொல்லை கவலைகளும்
மறைந்து மாய்ந்திடுதே - வருவீர் நண்பரே -2
உண்மை விடுதலை அடைந்திடவே-2 விண்ணில் உள்ள ... ...
2. கண்ணில் கருணையும் மண்ணில் அமைதியும்
இதயம் அவர் தரவே
விண்ணின் தேவனவர் நம்மில் நிறைந்துவிட்டால்
புலரும் புதுவிடியல் - வருவீர் நண்பரே - 2
உண்மை விடுதலை அடைந்திடவே-2 விண்ணில் உள்ள ... ...