எதை நான் தருவேன் இயேசய்யா எனதென்று சொல்ல ஒன்றுமில்லையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எதை நான் தருவேன் இயேசய்யா

எனதென்று சொல்ல ஒன்றுமில்லையே (2)

எல்லாம் நீ தந்ததே நான் வாழ்வது உமது கிருபையினால்-2


1. தாயின் வயிற்றிலே எனக்கு உருவம் தந்து

தாயைப்போல் தாங்கின தேவன் நீரே (2)

என்னில் உம் சுவாசத்தை ஊதி

தந்தையைப்போல் என்னோடிருப்பவரே (2)

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

போற்றுகிறோம் உம்மைப் புகழுகிறோம் (2)


2. இவ்வுலகமும் அதன் உல்லாசமும்

என் கண்முன் அழிந்து போகிறதே (2)

ஆனால் நீர் தந்த ஆவியின் அருட் கொடைகள்

என்னில் புதுவாழ்வு தருகிறதே (2) - வாழ்த்துகிறோம்...