கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிஞ்சுக் குழந்தாய் உன்னை நெஞ்சில் அள்ளி அணைப்பேன் நீ வாராய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிஞ்சுக் குழந்தாய் - உன்னை

நெஞ்சில் அள்ளி அணைப்பேன் நீ வாராய் - எந்தன்

நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் நீ வாராய்


1. பாரினில் பிறந்திடும் மழலைகளை

பாசமாய் ஏற்றிட மறுப்பதும் ஏன்

கண்ணே மணியே கனியமுதே - உன்னை

கட்டி அணைப்பேன் என் நிரையில் - தமிழ்

கவிதையில் இசைப்பேன் உன் புகழை


2. பள்ளியில் பயிலும் வயதினிலே

பாலர்கள் ஆலைகள் செல்வதும் ஏன்

பஞ்சம் பசி பிணி போக்கிட - என்றும்

தஞ்சம் என உனைத் தேடிடுவேன் - எந்தன்

கண்ணின் மணியே ஆராரோ