இறைவா இதோ வருகின்றோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா இதோ வருகின்றோம்

உம்திரு உள்ளம் நிறைவேற்ற (2)


1. கல்லான இதயத்தை எடுத்துவிடு - எமைக்

கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு (2)

எம்மையே நாங்கள் மறக்கவிடு - 2 நெஞ்சம்

ஏனையோர் துன்பம் நினைக்கவிடு


2. பலியென உணவைத் தருகின்றோம் - நிதம்

பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம் (2)

கடமை முடிந்ததென நினைக்கின்றோம் - 2 எங்கள்

கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு