இறைமையில் கலந்திட வாருங்களே இறைவனின் திருப்பதம் சேருங்களே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைமையில் கலந்திட வாருங்களே

இறைவனின் திருப்பதம் சேருங்களே

பலியினில் இணைந்திட கூடுங்களே

பரமனின் அருள்தனை நாடுங்களே

இனிய உறவுடன் வாழுவோம்

இறையின் சாட்சியாய் மாறுவோம்


1. இதயச் சுவர்கள் உடைந்திட

பகைமைப் பிளவுகள் அழிந்திட

எண்ணம் உயர்ந்து ஏற்றம் காண

பண்பில் சிறந்து பாசம் வளர்க்க

ஒன்றி வாழ்ந்து உறவைப் பகிர

நன்மை சேர்த்து நாளும் மகிழ

ஒன்றாகுவோம் கொண்டாடுவோம்

பலியினில் இணைந்து பண்பாடுவோம்


2. என்னை உடைத்துப் பகிர்ந்திட

எல்லை கடந்து உதவிட

படைப்பில் உன்னைக் கண்டு மகிழ

பசித்தோர் கண்டு உள்ளம் உருக

இயற்கையோடு இணைந்து வாழ

இறைவன் ஆட்சி மண்ணில் மலர