எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் உயிரே நீதான் இயேசுவே

உன்னை மட்டும் சுவாசிப்பேன் (2)

நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் -2

என்மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய் -2


1. கல்வாரி நினைவுகள்தான் என் வாழ்வில் பலமாகுமே

உன்னோடு ஒன்றாகினால் என் வாழ்வு நலமாகுமே

உணவாய் எழுந்து எனில் வந்து

என் உணர்வாய்க் கலந்து உயிர் சுமந்தாய்

மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே உதவும் ஆற்றல் வேண்டுமே


2. என் வாழ்வின் தேடல்களில் வழியாகி ஒளியாக வா

என் வாழ்வின் சோகங்களில் தாயாகி தாலாட்ட வா

உறவாய் என்னை நீ அணைத்தாய்

என் உறவுகள் இன்று உயிர் பெறுமே

சிலுவைகள் தோளில் நான் சுமக்க உனது சிறகுகள் வேண்டுமே