வருக வருக இறைவா நீ வருக எந்தன் விருந்தாய் நீ வருக விருந்திது விருந்திது இயேசுவின் திருவிருந்திது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருக வருக - 2 இறைவா நீ வருக

எந்தன் விருந்தாய் நீ வருக

விருந்திது விருந்திது இயேசுவின் திருவிருந்திது

அன்பைப் பொழியும் அருளை வழங்கும் மீட்பரின் திருவிருந்திது (2)


1. கண்ணின் மணியாய் கருவின் உயிராய்

என்றும் காக்கும் விருந்திது

தினம் தஞ்சம் என்றே நெஞ்சம் சேர்ந்தால்

கருணை பொழியும் விருந்திது (2)

உலகம் யாவும் வெறுமை என்றே உணர்த்த வந்த விருந்திது

உறவு வாழ்வும் பகிர்வு மனமும் பெருகச்செய்யும் விருந்திது

விருந்திது விருந்திது வாழ்வின் பொருளாய் வருமிது


2. அமைதி வழியாய் அன்புமொழியாய் எங்கும் வாழும் விருந்திது

எங்கும் உறவுக் கரமாய் உடலைத் தாங்க

அழைப்பு விடுக்கும் விருந்திது (2)

சிலுவைப் பயணம் சிரமம் தந்தும் நமக்காய் மடிந்த விருந்திது

வறண்ட வாழ்வில் வளமை சேர்க்க

மழையாய்ப் பொழியும் விருந்திது

விருந்திது விருந்திது நம்பினோர்க்கு மருந்திது