♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
என் மனம் ஏற்க தயக்கமோ நான்
காகிதப் பூவென்ற வருத்தமோ
1. வசந்தம் மறுத்தால் காற்றிலும் வாழ்வேன்
வான் மழை நின்றால் ஊற்றிலும் உய்வேன் (2)
செல்வங்கள் மறுத்தால் ஏழ்மையில் வாழ்வேன் -2
இயேசுவே நீயின்றி நான் எங்கு செல்வேன்
2. கனிகளைக் கொடுக்கும் கொடிகளின் முதல்வா
கனிவுடன் படைத்திடும் காணிக்கை ஏற்பீர் (2)
ஒலிவ மலைக்கு உம்முடன் வருவேன் -2
உயிராய் உடலாய் உம்முடன் வாழ்வேன்